நெல்லை மாவட்டத்தில் மழை உள்ள பாதிப்புகளில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மதிமுக சார்பில் அக்கட்சி மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறும் பொழுது, "நெல்லை மாவட்டத்தில் மதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த ஆறு நாட்களாக மதிமுக சார்பில் உணவுகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது, இந்த மாவட்டங்களில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளும் மிகவும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்டம் தூத்துகுடி மாவட்டங்களில் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  7 வது நாட்களாக இதுவரையிலும் மீட்பு பணி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. ஆறு நாட்களாக தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளை அனுப்பி வைத்து தீவிரமாக பணி மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது




இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல் மத்திய அரசு செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் 1200 கோடி பேரிடர்களாக ஒதுக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பை சீர் செய்யவே பல்லாயிரம் கோடி தேவைப்படுகிறது. மத்திய அரசு தற்போது வழங்கும் நிதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கில் தான் கூடுதல் நிதி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. பேரிடராக அறிவிக்கக் கேட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் பேசுகின்றனர். மத்திய அரசு தற்போது ஒதுக்கிய நிதியை வைத்து மிக்ஜாம் சேதத்தைக் கூட சரி செய்ய முடியாது. மிக்ஜாம் புயல் சீரமைப்பு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் 19,000 கோடி கேட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் பல்லாயிரம் கோடி நிவாரணம் வழங்க தேவைப்படுகிறது. மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபமடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இதுபோன்று நினைக்கிறது. கடந்த காலங்களில் நிதி ஒதுக்கீடு முறையை சுட்டிக்காட்டி போதும் அந்த தவறை ஏன் செய்ய வேண்டும். அரசியலை பொறுத்தவரை எதிரியையும் நண்பர்கள் ஆக்குவது அரசியல் யுக்தி என்பர்,


தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு பாஜக மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. தமிழக மக்கள் திராவிடத்தின் பின்னால் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிகிறது. மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசியல் ஒரு சாக்கடை என்பதை போல் பாஜகவினர் செயல்படுகின்றனர். தயாநிதி மாறன் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை நான் பேச்சாக பலமுறை பல கூட்டங்களில் பேசி உள்ளேன். அவர் சொல்லியது என்னவென்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு ஆங்கிலம்  கத்துக்  கொள்கின்றனர். இந்தியை எதிர்த்ததனால் இங்கு ஆங்கிலம் நிறைய பேர் கற்றுக் கொள்கின்றனர், அதனால் இன்று உலகம்  முழுவதும் இருக்கின்றனர். கூகுளின் சுந்தர் பிச்சியை உதாரணமாக சொல்கிறார். வடக்கே சென்றால் அவர்களுக்கு ஆங்கில புலமை இல்லை, அதனால் தான் அவர்கள்  போன்றோருக்கு ஐடி வேலைகள் போன்றவை கிடைப்பதில்லை, தமிழ்நாட்டை தேடி தான் வருகின்றனர். சாதாரண வேலையை செய்கின்றனர் என்ற அர்த்தத்தில் இந்தியா முழுவதும் ஆங்கிலம் தேவை என்ற அர்த்தத்தில் பேசினார். ஆனால் வட  இந்தியாவில் அவர் பேசியதை கட் செய்து வைரலாக்கி ஏதோ தமிழர்கள் வட இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என சித்தரித்து கேவலமான  அரசியலை  பாஜக செய்கிறது. அதை ஆதரிக்கிறது தமிழ்நாட்டு பாஜக. பாஜகவினர் மழை வெள்ள பாதிப்பை வைத்து கேவலமான அரசியல் செய்தி வருகின்றனர் அவர்களை விட்டு தள்ளுங்கள்" எனத் தெரிவித்தார்.