12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்து வாழ்த்தி எவ்வித உதவியும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


நாங்குநேரி சம்பவம்:


நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி - அம்பிகாபதி தம்பதயின் மகனான சின்னதுரை என்ற 17 வயது மகன்   வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். இவர்களது வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில்  சிலர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.


அசத்திய சின்னத்துரை:


விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது. இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.  இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தினார். இதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.


பா.ரஞ்சித் பாராட்டு:






இந்நிலையில் தற்போது திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் எவ்வித உதவியாக இருந்தாலும் தனது நீலம் பண்பாட்டு மையம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் .


 Also Read: Exclusive: “சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்” - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி