நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சேர்வலாறு அணை. இந்த அணை மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் மின்சார உற்பத்தியும் இதன்மூலம் நடைபெறுகிறது. இச்சூழலில் இப்பகுதியில் காணி பழங்குடியின மக்கள், மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தினர் என 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை:


மேலும் சேர்வலாறு பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 7 -ந் தேதி அந்த மூதாட்டி தனியாக வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் திரண்டுள்ளனர். இதையடுத்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.. இச்சம்பவம் குறித்து மூதாட்டி அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அம்பை அரசு மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.


இளைஞர் கைது:


மேலும் மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (வயது 30) என்பது தெரிய வந்துள்ளது. மாடசாமிக்கு திருமணமான நிலையில்  மனைவியுடன் கடந்த 5 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.


மேலும் மாடசாமி மீது சில குற்ற வழக்குகளும் ஏற்கனவே பதிவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் மது போதையில் வயது வித்தியாசம் தெரியாமல் மூதாட்டி இடம் தவறாக நடந்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மாடசாமியை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண