கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது முற்றிலும் குறைந்துள்ளது, நேற்று 1,482 பேருக்கு தொற்று பரிசோதனை நடந்தது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டம் மாறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 79,896 ஆகும். இதில் 72,387 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரியிலும், களப் பணியா ளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 16 லட்சத்து 9 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 



 

கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மக்கள் தற்போது முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும் தடுப்பூசி போடுவதி லும் ஆர்வம் குறைந்துள் ளது. மாவட்டத்தில் நேற்று (10.3.2022) 44 நபர்கள் முதல் கட்ட தடுப்பூசியையும், 202 பேர் 2&ம் கட்ட தடுப்பூசி யையும் செலுத்தி உள்ளனர். மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை டோஸ் 34 நபர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 

 



 

மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 12 லட்சத்து 11 ஆயிரத்து 454 நபர்களுக்கும், 2ம் கட்ட தடுப்புமருந்து 9 லட்சத்து 85 ஆயிரத்து 870 நபர்களுக்கும் மற்றும் மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை டோஸ் 14,430 நபர்களுக்கும் செலுத் தப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளி களில் தகுதியுடைய 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதில் இதுவரை மொத்தம் 77,343 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப் பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என 55,328 மாணவ, மாணவி களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

 

இது தவிர மாவட்டத்தில் முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக அபராதமாக இது வரை 3 கோடியே 6 லட்சத்து 73 ஆயிரத்து 430 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் நேற்று தான் பரிசோதனை எண்ணிக்கை பூஜ்யம் என்ற நிலை எட்டப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். மக்கள் கொரோனா இல்லை என நினைக்க வேண்டாம். எனவே கட்டுப்பாடு களை கடைபிடிக்க தவறக் கூடாது. முக கவசம் அணி தல், கைகளை நன்றாக சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.