நெல்லையில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் இன்று 100 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இதுவரை நெல்லையில் 49,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 49,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 433 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதோடு ஒற்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை அளித்து வருகிறது. 


அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 410 ஆக உள்ளது, மேலும் இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 56,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மொத்தமாக கொரோனா பாதிப்பு 56488 ஆக உயர்வு, மாவட்டத்தில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு என்பது இல்லை,





தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு மட்டுமே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று  ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று யாரும் டிஸ்சார்ச் செய்யப்படாத நிலையில் 13 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இதுவரை தென்காசியில் 27,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 26,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 486 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்,



கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 பேருக்கு மட்டுமே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று  8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், தற்போது 118 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 62,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 61,586 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1057 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், மாவட்டத்தில் ஒருவர் இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்.