கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டையில் அமைந்துள்ளது பல்லுயிரின பூங்கா முழுக்க முழுக்க தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் மான்கள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், குரங்கு என பல வகையான வன விலங்குகள் அரிய வகை பூச்சிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் அரிய வகையை சார்ந்த "சினேரியஸ் கழுகு" எனப்படும் பிணம் தின்னி கழுகு ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது மத்திய ஆசிய பகுதியை தாயகமாக கொண்ட இந்த கழுகு இந்தியாவில் அரிய வகை கழுகாகவே வரிசை படுத்தப்பட்டுள்ளது சுமார் மூன்றரை அடி உயரம், பெரிய கண்கள், கூரான நுனி உடைய வளைந்த அலகு, கால் விரல்களில் கூரான நகம், பறக்கும் போது சிறகுகளின் அகலம் 6-அடி 14-கிலோ வரை எடை என மெகா சைஸ் ல் காணப்படும் இந்த கழுகுகள் விண்ணுயர பறந்து தனது கழுகு பார்வையால் முழுக்க முழுக்க விலங்குகள் மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் இந்தியாவை பொறுத்தவரை குஜராத்திலேயே அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மெகா சைஸ் கழுகானது 2017-ல் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது பாதை மாறி தமிழகத்தில் நுழைந்தஇந்த கழுகு கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் உடலில் காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மீட்டனர்.
காயங்களுடன் இருந்த அந்த கழுகை வனத்துறையினர் உதயகிரி கோட்டைக்கு கொண்டு சென்று ஒக்கி புயலின் அடையாளமாக "ஓகி" என்று பெயர் சூட்டி கூண்டில் அடைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து பராமரித்து குணமடைந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக .இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் ஒன்றரை கிலோ வரை மாமிசமும் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அரிய வகை கழுகை கூண்டில் அடைத்து சிறைப் படுத்தக்கூடாது என்றும் அதை உடனடியாக விடுவித்து குஜராத் வனப்பகுதியில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு கழுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் விலங்கின ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய மாநில அரசுகள் இந்த கழுகை வனாந்தரத்தில் விட முடிவு செய்துள்ளது இது பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் இதன் மீது ஜிபிஎஸ் கருவிப் படுத்தி அதனை கண்காணிக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர் லிதுவேனியா நாட்டிலிருந்து இதற்காக பிரத்யேக ஜிபிஎஸ் காட்டி வரவழைக்கப்பட்டுள்ளது அதனை பொருத்தும் பணி முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் இந்தக் கழுகை அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவியை ஆராய்வதன் மூலம் இந்த கழுகின் இயற்கை வாழ்வியல் முறை அதன் வாழ்விடம் அது பறந்து செல்லும் திசை உள்ளிட்ட பல்வேறு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்