தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு - கைதை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் மீது கைது. ஆரல்வாய்மொழி காவல் கிளை கிளை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று முன்தினம் பாஜக வின் 42-வது துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இரணியலை சேர்ந்த பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி கருணாநிதி எம்பி உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் முகம் சுழித்தனர்.
இதனை திமுகவை சேர்ந்த சிலர் தட்டி கேட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலைஞர், முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் மீது திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் கலைஞர், முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசிய பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ்.
உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசுதல் பெண்களை இழிவு படுத்துதல்.கலகம் உருவாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார், இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் ஜெயபிரகாஷ் ஐ கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டை நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றிவளைத்தனர். அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரை முற்றுகையிட்டதால் கைது முயற்சி தோல்வியடைந்தது .
தொடர்ந்து நான்குமணி நேரமாக போலீசாரும் பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜெயபிரகாஷ் ஐ பாஜகவினர் நாங்கள் காவல் நிலையம் அழைத்து வருகிறோம் என கூறி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.தகவல் அறிந்து பாஜகவினர் 200 - க்கும் மேற்பட்டோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் கைது செய்யப்பட அவரை நீதி மன்றம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.