விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்  சீசன்-7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் தினேஷ் என்பவர். இவர் இன்று நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் தினேஷ் சின்னத்திரை ரசிகர்களில் தனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடித்த ”பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் இவருடன் நடித்த நடிகை ரச்சிதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Continues below advertisement

திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர். அதேபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் அவருக்கு அதிகமாக  ஆதரவு செய்து வந்தார். பிக் பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படியாவது டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

Continues below advertisement

ரச்சிதாவை தொடர்ந்து பிக் பாஸ் சீசன்-7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்றுவேன், நாங்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், ரச்சிதா அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த பிரச்னை ஒரு பக்கம்  இருக்கும் நிலையில், தற்போது தினேஷுக்கு மேலும் ஒரு பிரச்னை உருவாகியிருக்கிறது.

அதாவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் 40, பிக்பாஸ் சீசன் உள்ளிட்ட சின்னத்திரையில் நடித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி சென்னையில் சினிமாத்துறையில் கேண்டினில் வேலை செய்த போது தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் கருணாநிதி மனைவி நித்ய கல்யாணிக்கு மின்வாரிய துறையில் வேலை பெற்று தருவதாக கூறிய தினேஷிடம் ரூ. 3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் வள்ளியூர் வந்த தினேஷ் காரில் அழைத்துச் சென்று தாக்கியதாக கருணாநிதி பணகுடி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தினேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் போலீசார் விசாரணைக்கு தினேஷ் அழைக்கப்பட்டார்.

தினேஷ் கூறுகையில், ''வேண்டுமென்றே சிலர் இத்தகைய புகார்களை கூறுகின்றனர். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. என் மீது விரோதம் உள்ள செல்வின் இப்புகாரின் பின்னணியில் உள்ளார். நான் கைதாகவில்லை. போலீசார் விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர்,'' என்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய தினேஷ் இன்று நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.