மதுபோதையால் தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனை உறுதி செய்யும் விதமாக, கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  மதுபோதையில் இருந்த நபர்களால் இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

Continues below advertisement




திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி சீனிவாசா அவென்யூ வகையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் திங்கள்கிழமை நேற்று இரவு பெருமாள் புறம் அருகே உள்ள திருமால் நகர் மதுபான கடைக்கு அருகில் தனது நண்பரான மகிழ்ச்சி நகரை சேர்ந்த செல்வம் வயது (60) என்பவருடன் சென்று மது அருந்து கொண்டிருந்தார் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், அந்த பகுதியில் கறிக்கடை ஒன்றில் இருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாகக் குத்தியுள்ளார்.


உடனடியாக பாலகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயப் பகுதியில் கத்திக்குத்து விழுந்துள்ளதால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் போலீசார் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட செல்வம் என்ற முதியவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




இக்கொலை சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணனுக்கும் செல்வத்திற்கும் இடையே எந்தவித முன்விரோதமும் இருந்ததாகத் தெரியவில்லை. மதுபோதையில் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் செல்வம் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவடைந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.