கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மைகாலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் வெளியே வைத்திருக்கும் டூவீலர்களை குறிவைத்து திருடப்படுவது வாடிக்கையாக இருந்தது நாகர்கோவில் காவல் சரகதிற்கு உட்பட்ட வடசேரி , நேசமணி நகர் , ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் தங்கள் இருசக்கர வாகனங்களை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர் . அந்த வகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர் அப்போது அவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர் இதில் மாவட்டம் முழுவதும் 8க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
இரவு நேரம் வீட்டின் வெளியே உள்ள தெருக்களில் நோட்டமிடும் இந்த வாலிபர் தனியாக இருக்கும் வாகனங்களை குறிவைத்து அதன் பூட்டை திருட்டு சாவி கொண்டு திறந்து அதனை எடுத்துச் சென்று பின்பு பார்ட் பார்ட்டாக பிரித்து ஆக்கர் கடைகளில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தி உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது மேலும் இந்த திருட்டில் இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் இதற்கு மூளையாக செயல்பட்ட கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.