நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், குறிப்பாக  தற்போதைய சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தொடர் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, அதோடு முககவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிப்பதோடு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதலும் செய்யப்படுகின்றது. 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மயிலாடுதுறையில் இறுதிக்கட்ட சம்பா அறுவடை பணிகள் - கொள்முதல் நிலையங்களை திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்


குறிப்பாக இன்று நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் இரண்டு நபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் ஒரு பை இருப்பதை கண்ட காவல்துறையினர் அந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 60 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பணம் எங்கே இருந்து வந்தது, எதற்காக இவ்வளவு பணத்தை கொண்டு செல்கிறார்கள் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது  விசாரணையில் பாளை கேடிசி நகரில் வீடு  வாங்குவதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட வேண்டும் - மதுரை கிளை நீதிபதிகள் கருத்து




இதற்கிடையில், காரில் இருந்த நபர் முகமது அசாருதீன் என்பதும் அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது, எனவே அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே முகமது அசாருதீனை போலீசார் கண்காணித்து பிடித்திருக்கலாம் எனவும் தெரிகிறது. உண்மையிலேயே வீடு வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் தானா? அப்படி இருந்தால் முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் விடுவிக்கப்படும் இல்லையெனில் தீவிர விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகத் தொகை என்பதால் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண