கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அந்த மாநிலத்தின் முக்கியக் கொண்டாட்டமான திருச்சூர் பூரம் விழாவைக் தள்ளிப்போடச் சொல்லி மாநிலம் முழுவதும் பரவலான கோரிக்கை வலுத்துவந்தது. ”கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கொண்டாட்டத்தின் பெயரால் மக்கள் கூடுவது அறிவார்ந்த செயலாக இருக்காது” எனக் கேரளக் கலைத்துறையைச் சேர்ந்த பலர் ஒருங்கிணைந்து அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அந்த மாநில அரசு திருச்சூரின் பரமேக்காவு மற்றும் திருவம்பாடி தேவசம்போர்டுக்கு கோரிக்கை வைத்தது.
அரசின் கோரிக்கையை ஏற்ற தேவசம்போர்டு பொதுமக்களுக்கு அனுமதியின்றி இதர தீவிர கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளுடன் பூரம் கொண்டாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் கடந்த ஆண்டும் விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விழா நடைபெறும் திரூச்சூர் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: திருச்சூர் பூரம் நடக்கும்...கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது : ஷைலஜா