தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு பிரிவுகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாக கூறி சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிஐடியு பேச்சி முத்து தலைமை தாங்கினார். பின்னர் நுழைவுவாயில் முன்பு  என் டி பில் நிர்வாகத்திற்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.




இது குறித்து சிஐடியு செயலாளர் அப்பாத்துறை செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழக அரசும் என்எல்சி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு தொழிலாளி கூட நிரந்தரமாக பணியமர்த்த படவில்லை.




என்எல்சியில் இருந்து 150 பொறியாளர்களை கொண்டு இந்த அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு என்எல்சி அனல் மின் நிலையத்தில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பை பெற்ற பிறகும்கூட அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் தினசரி வழங்க வேண்டும் என்று  சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட  அதன்  மேல் முறையீடு  செய்து காலதாமதம் செய்கிறது .


இந்த நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 நாட்கள் பணி புரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க, தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்காமல் பல ஆண்டுகள் சட்ட விதிமீறல் செய்த நிறுவனங்கள், துணை நின்ற ஹெச்ஆர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.




மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவறை, பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர நிறுத்துமிடம் அமைத்து கொடுக்கவும், பணிபுரியும் இடத்தில் முதலுதவி பெட்டி வைக்கவும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்து தரக்கோரியும் பல கோரிக்கைகளை முன் வைத்து சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.


மேலும் தொழிலாளர்கள் விரோத போக்கினை கைவிடவில்லை என்றால் வருகின்ற 10ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண