வியட்நாமை சேர்ந்த மிக பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதை முதல் அமைச்சர் ஸ்டாலின் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

Continues below advertisement

இதை தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக விஎஃப்6 (VF 6) மற்றும் விஎஃப்7 (VF 7) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கூடிய விரைவில் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதற்கு ஏற்ப தூத்துக்குடி தொழிற்சாலையில், வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

இதற்கு இடையே 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி (3-row Electric SUV) கார் ஒன்றுக்கு, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்டதால், 6 சீட்டர் அல்லது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராக இருக்கலாம். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்யப்படும் ஒரு கார், கண்டிப்பாக விற்பனைக்கு வரும் என உறுதியாக சொல்ல முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அதன் தூத்துக்குடி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள், இந்திய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. கூடவே இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. எனவே தூத்துக்குடி தொழிற்சாலை வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஏற்றுமதி மையமாகவும் திகழவுள்ளது. தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளுக்கு, தூத்துக்குடி தொழிற்சாலையில் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. ஒருவேளை இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வருவதாக இருந்தால், அதுவும் தூத்துக்குடி தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படும்.

இந்தியாவில் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல 'டிமாண்ட்' இருக்கிறது. எனவே வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ள 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கருதப்படுகிறது. முன்னதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள விஎஃப்6 எலெக்ட்ரிக் காரின் விலை 25 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் விஎஃப்7 எலெக்ட்ரிக் காரின் விலை 50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.


Car loan Information:

Calculate Car Loan EMI