தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( நவம்பர் 11, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர்.
திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ் கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்துர் TO காயல்பட்டணம் ரோடு, P.T.R. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், செந்தாமரை விளை, வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம்கஸ்பா,
நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம்.
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
நாளை செவ்வாய்க்கிழமை என்பதால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மின்தடைக்கு ஏற்றவாறு முன்னேற்பாடுகளை செய்துக்கொண்டு வாருங்கள். மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்வது மற்றும் பிற மின் சாதனப் பொருட்களுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு வருவது உங்களுக்கு எந்தவித இன்னல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.