தூத்துக்குடி ரோச் பூங்காவில் பராமரிப்பின்றி முடங்கிக் கிடக்கும் சைக்கிள்களை வாடகைக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பூங்காக்களின் நடைபாதைகள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் உணவு பழக்க வழக்கம் போன்றவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரழிவு நோய் போன்றவற்றிலிருந்து இளம் வயது முதல் முதியவர் அனைவரையும் பாதுகாக்கும் வகையிலும் உடல் ஆரோக்கியம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உடல் நலனில் அக்கறை கொண்ட பலரும் அதிகாலை மற்றும் மாலைப் பொழுதுகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களிலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் பொதுமக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரை பகுதியில் நடைபயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காக திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சுமார் 2 லட்சம் மதிப்பில் 50 சைக்கிள்கள் வாங்கப்பட்டன. இந்த சைக்கிள்களை தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் பாதுகாப்பாக வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்த அனுமதித்தனர். இது பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றது. சைக்கிளில் செல்வதால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த பலரும் அதனை பயன்படுத்தினர். இந்நிலையில் தான் உலகையே அச்சுறுத்திய கொரோனா வந்தது. கொரோனா ஊரடங்கால் சைக்கிள்களும் பூங்காவுக்குள் முடங்கி போயின. கொரோனா ஊரடங்கு முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் சைக்கிள் ஓடாமல் ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.
தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரை சாலை பகுதியில் ஏராளமான மக்கள் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக சைக்கிள் ஓட்டுவதற்கான வாய்ப்பை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்கின்றனர். பொதுமக்கள் இதற்காக குறைந்த தொகையை வாடகை கட்டணமாக வசூலித்து முடங்கிக் கிடக்கும் சைக்கிள்களை மீண்டும் ஓட வைக்க வேண்டும். அதேபோன்று சைக்கிள் ஓட்டுவதற்கான பிரத்தியேகமாக வழித்தடத்தையும் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் உடல்நலத்தை மனநலத்தை பாதுகாக்கும் வகையில் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்ட உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு கார் இல்லா ஞாயிறு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அப்போது கார்களின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிநவீன 50 சைக்கிள்கள் வாங்கப்பட்டன. இந்த கார் இல்லா ஞாயிறன்று சைக்கிளிங் செல்வது பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது இந்த சைக்கிள்கள் அனைத்துமே பராமரிப்பின்றி ரோச் பூங்காவில் முடங்கி கிடக்கின்றது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உள்ளதாக கூறும், பொதுமக்களிடையே சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறும் வாக்கிங் செல்வோர், இந்த சைக்கிள்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சைக்கிள்களை குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கொடுத்தால் உடல் நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் சுற்றுச்சூழல் மாசும் குறையும். வாரத்தில் ஒரு நாளாவது பொதுமக்கள் சைக்கிளில் சென்று ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் மாசு குறையும் என்கின்றனர்