நாடு முழுவதுமுள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சங்கமான HMS, INTUC, CITU, AITUC, உள்ளிட்ட தேசிய துறைமுக தொழிலாளர்களின் கூட்டமைப்பு கூட்டமானது தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. ஆல் இண்டியா போர்ட் ஒர்க்கர்ஸ் பெடரேஷன் (HMS) தலைவர்கள் P.M. முகமது ஹணீப், G.M. கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதமான போக்கு, ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்துவது, சம்மேளனங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் போனஸ் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் அதை அமுல்படுத்தாத நிர்வாகத்தின் மெத்தன போக்கு போன்ற காரணங்களை கொண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், சம்பள உயர்வு மற்றும் இதர கோரிக்கைகள் 05.09.2021 மூன்று வருடங்களுக்கு முன்பே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. 01.01.2022 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில், இந்த மூன்று வருடங்களில் ஏழு முறை ஊதிய உயர்வு ஒப்பந்த கமிட்டி கூட்டம் நடைபெற்றும் இறுதி முடிவு எடுக்கபடாமல் இழுத்தடித்து கொண்டு செல்வது கப்பல்துறை அமைச்சகத்தின் முன்எப்போதும் இல்லாத நடைமுறையாக உள்ளது..இந்நிலையில் போனஸ் ஒப்பந்தம்15.06.2023 அன்று இருதரப்பும் கையெழுத்திட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு நிலையில் இன்று வரை அமைச்சகம் ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது.
மேஜர் போர்ட் Act 1963, மேஜர் போர்ட் அத்தாரிட்டி Act 2021 என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிட போது அதை சம்மேளனங்கள் கடுமைகயாக எதிர்த்தன. இச்சட்டம் துறைமுகங்களை தனியாருக்கு தாரை வார்க்க உருவாக்கப்பட்ட சட்டம் என்று சம்மேளனங்கள் கூறிய போது. இச்சட்டம் துறைமுகங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், துறைமுக ஊழியர்கள் மத்தியில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படாதது, மற்றும் துறைமுக கப்பல் தளங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது துரதிஷ்ட வசமானது.. இதனால் ஊழியர் சம்மேளனங்கள் வேறு வழியின்றி கடைசி ஆயுதமாக ஜனநாயக முறையில் 28.08.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. மத்திய கப்பல்துறை அமைச்சகம் உடனடியாக சம்மேளனங்களை அழைத்து கோரிக்கைகளை குறிப்பாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றிட வேண்டும்..... என்று சம்மேளன தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில், செயலாளர்கள், துறைமுகம் சத்யா, தாமஸ் செபாஸ்டின், தாமோதரன், சுரேஷ். ஆல் இண்டியா போர்ட் அன்ட டாக் ஓர்க்கர்ஸ் பெடரேஷன் (HMS) தலைவர்கள் அப்ராஜ். VV ரானே, G. ஜான் கென்னடி, கிளின்டன், CITU சார்பாக S. பாலகிருஷ்ணன், R. ரசல், காசி, AITUC. சார்பாக சரவணன் சீனிவாசராவ், பிரகாஷ்ராவ், பாலசிங்கம், G.ராஜ்குமார். INTUC சார்பாக P. கதிர்வேல், பலராமன், ரோமால்ட் மற்றும் கனகராஜ் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.