தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமன்றி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை உதவிகளை செய்ய வேண்டும் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தென்பகுதிக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியான தருணத்தில் தான் எப்பொழுதும் வருவேன் இன்று சோகமான மன கஷ்டமான தருணத்தில் தான் வந்துள்ளேன்.
நான் மழை பெய்த 16ம் தேதியிலிருந்து தொடர்ந்து கவனித்து வருகிறேன், தெலுங்கானாவில் குடியரசுத் தலைவர் ஒரு வார காலமாக அங்கே இருந்தார்கள் இருந்தாலும், தொலைவிலிருந்து ரயிலில் காப்பாற்றப்படுவது உட்பட பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன் எனது ஆழமான கருத்து மாநில அரசின் இந்த சூழ்நிலையை எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் சரியாக எடுத்திருக்க வேண்டும் 16ஆம் தேதியே மழை ஆரம்பம் ஆகிவிட்டது சிலர் வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்கிறார்கள். சென்னையில் ஒரு அனுபவம் இருக்கிறது சொல்வதை விட அதிகமாக மழை பெய்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
குஜராத்தில் புயல் மழை வருகிறது என்றவுடன் தாழ்வான பகுதியில் உள்ள ஒரு லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஒரிசாவில் சைனி புயல் வரும் பொழுது 10 லட்சம் பேர் அப்புறப்படுத்தி ஜீரோ கேஷவாலிட்டி ஒரிசா மாடல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என அறிவித்தார்கள். ஆனால் இங்குள்ள திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது .
நான் நேரடியாகவே முதலமைச்சரிடம் கேட்கிறேன். பதினெட்டாம் தேதி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா இல்லையென்றால் மக்களோடு முதல்வர் என கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா அதற்கு அடுத்த நாளும் வரவில்லை கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்று விட்டார். பிரதமரை பார்க்கத்தான் சென்றதாக கூறுகிறார் அப்படி என்றால் கூட்டணி கட்சி மழை நீரை சேமிப்பதற்கோ.. செய்யக்கூடிய மழை நீரை வருங்காலத்திலும் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு என்ன முயற்சி எடுத்தது. மத்திய அரசை குறை கூறுவது விட்டுவிட்டு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றார். மக்கள் இந்த வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை இணைந்து இருக்கக்கூடிய சூழலில் முதலமைச்சர் இந்த மாவட்டத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு. முதலமைச்சர் இங்கே உள்ள எத்தனை மணி நேரம் செலவழித்தார் என மக்களிடம் நான் கேட்கிறேன். தென் மாவட்ட மக்களை மாற்றான் தாய் மனப்பமையுடன் தமிழக அரசு நடத்துகிறது” என்றார்.