முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தான் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விடவும், ரீல்ஸ் எடுக்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. அறுபடை வீடுகளில் 2வது இடத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது திருச்செந்தூர் செல்வோர் அங்கிருந்து வீடியோ எடுத்து ரீல்ஸாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்ஸ் பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோவிலில் திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில் தான் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் செல்போன், கேமரா பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்கவும், ட்ரோன்களை பறக்க விடவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பக்தர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் கோவிலில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கோவிலைசுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி ட்ரோன் கேமரா பறக்கும்பட்சத்தில் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டு பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதேபோல் கோவிலை சுற்றியுள்ள பகுதகிளில் செல்போன், வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்கதடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் செல்போன், கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு தற்போது பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் விரைவில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச விழாவின்போது பக்தர்கள் அதிகளவில் கோவிலில் கூடுவார்கள். இந்த விழாவையொட்டி முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து பாதையாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இப்படியான சூழலில் தான் கோவில் நிர்வாகம் சார்பில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடவும், செல்போன் மற்றும் கேமராவில் ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.