லெஜண்ட் சரவணன், தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றடைந்த பொழுது விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். 

Continues below advertisement

Continues below advertisement

லெஜண்ட் படம் மூலம் நடிகரானவர் சரவணன். தொழிலதிபர்கள் தேர்வு செய்யா வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டார். இதையடுத்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இரண்டாவது கட்ட ஷூட்டிங் தூத்துக்குடியில் நடக்கிறது. லெஜண்ட் ஹீரோவாக நடித்து வரும் புது படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். லெஜண்டுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. இயக்குநர் துரை செந்தில்குமார் லெஜண்டை வைத்து வித்தியாசமான படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லெஜண்டை வைத்து ஆக்ஷன் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கிளம்பிய ஜெலண்ட் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த லெஜண்டிடம் அரசியல் வருகை மற்றும் அரசியல் விருப்பம் குறித்து கேட்கப்பட்டது. விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என கேட்டதற்கு லெஜண்ட் கூறியதாவது, ”இந்த முறை மும்முனை போட்டிதான் இருக்கும். இதில் எந்த கூட்டணி வலுவான கூட்டணியாக அமைக்கிறதோ அவர்களால்தான் வெற்றியை பெறமுடியும். தனித்து யாரும் வெற்றிபெற முடியாது. 2026-க்கு இன்னும் காலம் இருக்கு. என் கொள்கைக்கு ஒத்துப்போகும் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவேன்” என்றும் தெரிவித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.