தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் முத்து என்பவர் பாதிக்கபட்ட  பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.




பேஸ்புக் நண்பர்:


தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பேஸ்புக்கில் Nicholas Andrewis Morris என்ற பெயருடைய அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரெண்ட் ரிக்வெஸ்ட் (Friend Request) கொடுத்து பின்னர் மேற்படி பெண்ணும் அந்த நபரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அந்த நபர் மேற்படி பெண்ணுக்கு கிப்ட் பார்சல் (Gift Parcel) ஒன்றை அனுப்புவதாக கூறியுள்ளார். 


ரூபாய் 38 லட்சம் மோசடி:


பின்னர் ஓரிரு நாட்களில் மேற்படி பெண்ணிடம் அங்கீதா என்ற பெயரில் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து (Customs office) பேசுவதாக கூறிய மற்றொரு நபர் 70,000/- Pounds பணம், நகை மற்றும் iPhone ஆகியவை பார்சலில் தங்கள் பெயருக்கு வந்துள்ளதாகவும் அந்தப் பார்சலை பெறுவதற்கு பிராசசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிட்ட வகைகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறியதன் பேரில் மேற்படி பெண் அதனை நம்பி பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூபாய் 38,19,300/- பணத்தை பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மூலமும் மற்றும் வங்கி கணக்கிலும் அனுப்பியுள்ளார்.பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பெண் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.




குற்றவாளி கைது:


மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் முத்து (32) என்பவர் பாதிக்கபட்ட  பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு நேற்று சென்னை சோழிங்கநெல்லூர் பகுதியில் வைத்து மோசடி முத்துவை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.