தூத்துக்குடியில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றது மீன்பிடித் தொழில் இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்று உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நம்பிக்கை.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 266, தருவைகுளத்தில் 243, வேம்பாரில் 40, திரேஸ்புரத்தில் 2 என மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலான படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில படகுகளை கரைக்குக் கொண்டு வந்து சீரமைப்பு பணிகளை உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.
விசைப்படகு மீனவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படகுகளை முழுமையாக சரி பார்த்து தயார் செய்தனர். மேலும், வலைகளையும் முழுமையாக சீரமைத்து சரி செய்தனர். பலர் புதிய வலைகளையும் வாங்கி வைத்துள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளன. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் செலுத்தியும். இயந்திரத்தை இயக்கியும் பரிசோதனை செய்தனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது இந்த தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் நீங்கியதை தொடர்ந்து ஜூன் 15 இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்வதால் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்கு ஆர்வமாக சென்றனர். மேலும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இந்நிலையில் 60 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள் இன்று நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.