ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணியை துவங்கிய அயன்ராஜாபட்டி விவசாயிகள்.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன இங்கு பெரும்பாலும் புரட்டாசி ராபி பருவம் மூன்றாவது வாரத்தில் இருந்து விதைப்பு பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதம் பெய்யக்கூடிய பருவ மழைக்கு முதன் முதலில் மணல் சார்ந்த நிலங்களில் கடலை விதைப்பு பணியை முதற்கட்டமாக துவங்கி, அதன் பின்னர் ஆவணி மாதம் இதர வெள்ளைச்சோளம் வெங்காயம் மிளகாய் உளுந்து பாசி போன்றவைகளும் அதற்கடுத்தார்கள் 15 நாட்களுக்கு கழித்து கம்பு பயிறும் அதற்குப் பின்னர் ஐப்பசி முதல் வாரத்திற்கு பிறகு கொத்தமல்லி மற்றும் சூரியகாந்தி விதைப்பு செய்தனர். அவ்விதைகள் அனைத்து ஐந்து மாதப்பயிர்களாகும்விதைகள் அதன் மகசூல் காலம் ஐந்து மாதங்கள் ஆகும் அதன் மகசூல் இயற்கையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் சத்து மிகுந்ததாகவும் இருந்தது. ஆனால் தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பவும், பருவமழை பின்னோக்கியதாலும் புரட்டாசி 3வது வாரத்திற்கு பிறகே விதைப்பு செய்ய முடிகிறது.

Continues below advertisement

கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த மழை கனமழையாக பெய்து பயிர்கள்  கடும் சேதம் ஏற்பட்டு முழுவதுமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு விவசாயியும் அவரவர் தகுதிக்கேற்ப லட்சம் முதல் பல லட்சங்கள் வரை நஷ்டப்பட்டனர் .

இந்நிலையில் இந்த ஆண்டு பருவத்திற்கு மழை பெய்து அளவோடு பெரிது விவசாயம் செழித்து நல்ல மகசூல் பெற வேண்டும் என இயற்கையை வழிபட்டு விவசாயிகள் முதன் முதலில் ஆடிப்பட்டத்தில் கடலை விதைப்பு பணியை ராஜாபட்டி கிராமத்தில் இருந்து விவசாயப்பணியை தொடங்கி இருக்கின்றனர் .இன்னும் பருவ மழைக்கு 45 நாட்களே உள்ள நிலையில் வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதைகள் உரங்கள் மருந்துகள் ஆகியவற்றை போதிய அளவு முன்கூட்டி இருப்பு வைத்தும், விவசாயிகளுக்கு தேவையான வீரிய ஒட்டு ரக விதைகளை, உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கி  உதவ வேண்டும்.தவிர ஒவ்வொரு ஆண்டும் ரக விதைகளை மட்டுமே வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கி வருவதால் அதில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை. அதனால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் அதிக விலை கொடுத்து வீரிய ஒட்டு ரக விதைகளை வாங்கி விதைப்பு செய்கின்றனர்  இந்தாண்டாவது தேசிய விதைகள் கழகத்தில் கொள்முதல் செய்து உரிய நேரத்தில் மக்காச்சோளம் சூரியகாந்தி மற்றும் உளுந்து பாசி ஆகிய விதைகளை வழங்க வேண்டும். ஆடிப்பட்டத்தில்  மழை பெய்துள்ளதால் கடலை விதைப்பு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புரட்டாசி மூன்றாவது வாரம் முதல் உளுந்து பாசி கம்பு போன்றவைகளும் விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர்.தவிர விவசாயிகள் கடந்த ஆண்டு 2023 -24 இல் பயிர் காப்பீடு செய்திருந்தனர். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாகியும் பயிர் காப்பீடு இழப்பீடு இதுன நாள் வரை  கிடைக்கவில்லை.  எனவே அரசு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, விவசாயிகளுக்கு வேண்டிய உரங்கள் மருந்துகள் விதைகள் அவ்வப்போது வழங்கி அவ்வப்போது பயிரிடப்பட்ட நிலங்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்கி நல்ல மகசூல் கிடைப்பற்கு உதவ வேண்டும். தவிர பயிர்க் கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வித அடமானமும் எவ்வித பிணையும் இன்றி தற்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் ஓராண்டு கடனாக வழங்கப்படுகிறது. தற்போதைய செலவீனங்களுக்கேற்ப அதை மூன்று லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.