தூத்துக்குடி இயக்குனர் ஹரி இயக்கி நடிகர் விஷால் நடித்து வெளியாகியுள்ள ரத்னம் திரைப்படத்தின் பிரமோஷன் காட்சியை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இயக்குனர் ஹரி வெளியிட்டு ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.




இயக்குனர் ஹரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரத்னம். அவரின் 17 வது திரைப்படமான இதில் கதாநாயகனாக நடிகர் விஷால் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் ரத்னம் திரைப்படத்தின் பிரமோஷன் காட்சி வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் ஹரி கலந்து கொண்டு திரையரங்கிற்கு வந்திருந்த பொதுமக்களுடன் அமர்ந்திருந்து காட்சியைப் பார்த்து ரசிகர்களுடன் தனது கருத்தை பரிமாறிக் கொண்டார்.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹரி கூறுகையில், நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து பார்க்க இவ்வளவு ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்க வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அவசியமாக உள்ளது தான் இயக்கி வெளியிட்டுள்ள வெளிவர உள்ள ரத்னம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் எந்த விதமான முகம் சுளிக்கவிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை குடும்பத்துடன் அனைவரும் வந்து திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் .




தொடர்ந்து பேசிய அவர், “இது தனது 17வது படம். இந்த படத்தின் கதை வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் தமிழக திருத்தணி பகுதிகளை சுற்றி நடைபெற்ற கதைக்களமாகும். முதல்முறையாக வட மாவட்ட பகுதியை வைத்து தான் படம் எடுத்துள்ளதாகவும் இதற்கான படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதாக தெரிவித்தார்.இந்த திரைப்படம் நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படத்திற்கு அடுத்ததாக ஒரு வெற்றி படமாக அமையும்” என்றார்.


அப்போது அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம் தானே” என்றார்.மேலும் தனது படங்களின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கும் எண்ணமில்லை என்றும், விரைவில் போலீஸ் கதை அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் ஹரி தெரிவித்தார். அதேசமயம் ஓடிடி இணையதளங்களில் படங்கள் வெளியாவதால் சினிமாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.


திரையரங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளதால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து பார்ப்பது எண்ணிக்கை கூடியுள்ளது.ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் சினிமாவிற்கு கூடுதல் பலம் என்று ஹரி கூறினார்.