திமுகவின் எதிரி கட்சியாக வர பாஜக ஆசைப்படலாம். சொல்லலாம். ஆனால் தேர்தல் காலங்களில் திமுகவிற்கு எதிரான கட்சி அதிமுக தான் என்று தூத்துக்குடி தொகுதி வேட்பாளார் கனிமொழி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி திருச்செந்தூரில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் இ.ண்.டி.யா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாகக்கூட நடக்கலாம். ஆனால் பாஜகவினரால் காங்கிரஸ் கட்சியின் வங்கிகணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றும் பல தலைவர்கள் சிறையில் உள்ளனர் பிறகெப்படி தேர்தல் நியாயமாக நடக்கும் என கேள்வி எழுப்பினார். மேலும் அனைவரும் மிரட்டப்படுகிறார்கள் ஊடகங்கள் மிரட்டப்படுகிறது என்றும் உண்மையான செய்திகளை போடவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறதாகவும் விமர்சனம் செய்தார்.