பாளையங்கோட்டை மூளி குளம் பகுதியில் ஊர் நாட்டாமை சுப்புராஜ் மீது தாக்குதல் - மாநகராட்சி மண்டல தலைவர் ரேவதி மற்றும் அவரது சகோதரர்கள் கட்டையால் தாக்கியதாக புகார் சிகிச்சைக்காக சுப்புராஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்.




திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டையை அடுத்த மூளி குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் (36), தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும் அவர் மூளிகுளம் கிராமத்தின் நாட்டாமை ஆகவும் செயல்படுகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் இன்று மாலை தனது மகளை வழியிலிருந்து அழைத்து வந்த சுப்புராஜ் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார் அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் மண்டல தலைவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டிலிருந்த அவரது சகோதரர் சரவணன் உள்ளிட்ட இருவர் சுப்புராஜை அடித்ததோடு வீட்டிலிருந்து எடுத்து வந்த உருட்டு கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ஊர் மக்கள் தலையிட்டதால் அவர்கள் வீட்டிற்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது .




இதனை அடுத்து சுப்புராஜை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .மருத்துவமனை புற காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து சுப்புராஜ் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜக பிரமுகர் ஜெகனைகொலை செய்ததாக திமுக பிரமுகரும் மண்டல தலைவரின் கணவருமான பிரபு கைது செய்யப்பட்டார் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சுப்புராஜ் இருப்பதால் அவர்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதனாலயே தான் தாக்கப்பட்டதாக சுப்புராஜ் தெரிவித்தார்.தன்னை ரேவதி அவரது சகோதரர் சரவணன் அவரது நண்பர் பாஸ்கரன் ஆகியோர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். எதிர் வீட்டுக்காரரையே திமுக மண்டல தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.