தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை அதிமுக. ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.  அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90  கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.




இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு உதவுவதற்காக தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில். விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் தம்பிகள் சண்முகநாதன் சிவானந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் ஆஜராகினர். வழக்கு விசாரணையில் மாவட்ட நீதிபதி ஐயப்பன் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் அரசு தரப்பு சாட்சி 16-வது சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் அரசு தரப்பில் ஆவணங்கள் குறியீடு செய்யவும் அனுமதி அளித்தார்.




இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா அமலாக்கத்துறை மனுவிற்கு எதிராக ஆஜராகி வாதாடினார். சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக் துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மாவட்ட நீதிபதி ஐயப்பன் வருகிற ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.