மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக அரசை பதவி விலக வலியுறுத்தியும் திருவாரூரில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.


திருவாரூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும் என கூறியிருந்தது. ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறும் திமுக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதனை சரி செய்தாலே தமிழ்நாடு மின்மிகு மாநிலமாக இருக்கும். எனவே  மின் கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். 




இந்த நிலையில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார் இதில் மாநில பொதுச் செயலாளர்கருப்பு முருகானந்தம்  பேசுகையில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை  மின்கட்டணம் செலுத்திய முறையை மாற்றி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்று கூறியது. ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக மின் கட்டணத்தை பெருமளவு உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு தற்போது தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு வழங்குவோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. இதே போன்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தனியார் துறையில் 27% இட ஒதுக்கீட்டை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர். இதனையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.




திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மட்டும் நிறைவேற்றி உள்ளது. ஒன்று அனைவருக்கும் வீடு கட்டி தருவோம் என்று கூறியது. குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவோம் என்று கூறிய இரண்டு மட்டுமே. அந்த இரண்டு திட்டமும் மத்திய அரசின் பிரதமர் வீடு கட்ட திட்டம் மற்றும் ஜல்ஜீவன் மிஷன் என்கிற குடிநீர் திட்டம் ஆகும் என்று அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக அரசை கண்டித்தும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் பதாகைகளில் ஏந்திக்கொண்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண