Just In





திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை
இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூரில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் கடும் வெயிலின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் கொரடாச்சேரி, குடவாசல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்த மழை என்பது வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி நடைபெற்றது. அதன் அறுவடை பணிகள் முழுமையாக முடிவடைந்து ஊடுபயிராக பயிறு உளுந்து சாகுபடியை திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று பணப் பயிர்களான பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர் பரப்பளவில் பயிறு உளுந்து சாகுபடி என்பது செய்ப்பட்டுள்ளது. இந்த அறுவடை பணிகள் என்பது தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவில் பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று பணப் பயிரான பருத்தி சாகுபடி என்பது திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி பயிரிடுதல் நடைபெற்ற சமயத்தில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.பின்னர் மீண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். எனவே ஒருமுறை பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தற்போது பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி பயிர்கள் அழுகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.