உட்கட்சி தேர்தலை நடத்தும்வரை, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தாக்கத்தைச் சுட்டிக்காட்டி உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. 

இதையடுத்து, சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.