மயிலாடுதுறை அருகே குறிச்சி ராஜன் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் குறிச்சி முத்துக்குமார் என்பவரது வயலில் இயந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கும்பகோணம் அருகே அம்மன் குடியை சேர்ந்த 28 வயதான மாரியப்பன் என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். பணியின் போது ரவியின் கவனக்குறைவால் மாரியப்பன் எதிர்பாராதவிதமாக வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்து இறந்தார்.
இதையடுத்து மாரியப்பன் உறவினர் மணிவேல் என்பவர் தந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மணல்மேடு காவல்துறையினர் மாரியப்பன் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செம்பனார்கோவில் அருகே மளிகை கடை குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மளிகை பொருட்கள், லோடு ஆட்டோ எரிந்து நாசம்!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளியை சேர்ந்தவர் கோபிநாதன். இவருக்கு சொந்தமான மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கெட்டுகள் வைக்கும் குடோனில் பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அடுக்கி வைத்திருந்துள்ளார். அதே வளாகத்தில் சரக்கு ஏற்றிசெல்லும் லோடு ஆட்டோ ஒன்றும் நின்றுள்ளது. இந்நிலையில் குடோன் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருக்கடையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
நிலைய அலுவலர் அருண்மொழி தலைமையில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அதற்குள்ளாக லோடு ஆட்டோ எரிந்து சாம்பலானது. மேலும் குடோனில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், பிஸ்கெட்டுகளும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு 5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டமானது 9 அம்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில் இதில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மாதாந்தத்திர பிடித்தம் தொகையை 350 ரூபாயில் இருந்து 497 ரூபாயாக உயர்த்தப்பட்டதை ரத்து செய்து பழைய பிடித்தம் தொகையான 350 ரூபாயை செயல்படுத்த வேண்டும்.
மற்றும் பணி நிறைவு நாளன்று பணியிலிருந்த தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்ககைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.