தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் "உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது.


மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான  உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள் கொண்டாடப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நிலம் பாதிப்பை சந்திக்கும் நிலையை விளக்கும் வகையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் பெயிண்ட்ஸ் அருகில் இருந்து  தமிழ் பல்கலைக்கழகம் வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
.
தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேராசியர் தியாகராஜன், அறிவியல் புல முதன்மையர் முனைவர் நீலகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் பூமியை காப்போம் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தமிழ் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் முருகன், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆட்சி குழு உறுப்பினர்கள், அலுவல் நிலை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழில் மற்றும் நில அறிவியல் துறை ஆராய்ச்சி மாணவி பிரபீனா நன்றி கூறினார்.