தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் அருகே உள்ள மாளிகைக்காடு  கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு பகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்பவரது மகள் துர்கா தேவிக்கும் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் ஒன்றரை வயதில்

  கபிலேஷ்  என   2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பல்வேறு காரணங்களால் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இது குறித்து தனது பெற்றோர்களுடன் கணவனின் கொடுமையை தெரிவித்து வந்துள்ளார். 



கடந்த கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கும் தகராறு முற்றியது. இதனை மனமுடைந்த துர்காதேவி, வாழ்வற்கு வழியில்லை என தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துர்காதேவி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த துர்காதேவியின் பெற்றோர் மாளிகைக்காடு வந்துள்ளனர். தனது சகோதரி துர்கா தேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



 


புகாரின் பேரில் உடலைக் கைப்பற்றிய அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் துர்காதேவியின் கணவர் ராஜேஷை விசாரணைக்கு அழைத்து சென்று, இது கொலையா, தற்கொலையா என அதிராம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு குவிந்த துர்கா தேவியின் உறவினர்கள்,  துர்காதேவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும், இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேசை கைது செய்ய வேண்டும், உடற்கூறாய்வு பரிசோதனையை விரைந்து முடித்து சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  



இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பின்னர், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், தவறும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறையினர். உடற்கூறு ஆய்வு பரிசோதனையை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர். இச்சம்பவம் அதிராம்பட்டினம் மாளிகைக்காடு, பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.