தஞ்சாவூர்: தஞ்சாவூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தஞ்சாவூரில் திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் 650 தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சட்டை, துண்டு, புடவை மற்றும் ரெயின்கோட், கையுறை போன்றவை சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.
இதை மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவும் ஆன துரை.சந்திரசேகரன் வழங்கினார், அதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை மீன் ஆகிய அசைவ அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்