வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட முச்சந்தி, சிவன்கோவில் தெரு, ஆசிரியர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை  நிரம்பி சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று  பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட முச்சந்தி, சிவன்கோவில் தெரு, ஆசிரியர் காலனி பகுதி வழியே செல்லும் பாதாள சாக்கடை கழிவு நீர் நிரப்பி சாலையில் செல்கிறது.



 

மேலும், அருகிலேயே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு  மற்றும் புதைவட மின் இணைப்பு பெட்டி  அருகிலேயே கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசு  குடியிருப்புகளில் வசிப்பவர்கள் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு மாத காலமாக சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 



 

வேளாங்கண்ணிக்கு வருகை தரும் வெளிமாநில வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உடைப்பை சரி சரி செய்ய வேண்டும் என வேளாங்கண்ணி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.