வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் , வெறிச்சோடி காணப்பட்டது

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து  பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை  சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் குறிப்பிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததால், வெறிச்சோடி காணப்பட்ட கோயில்கள், வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement


இக்கோயிலில் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு வெகு விரைவு தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதே போல்  12 ஆழ்வார்களும் உற்சவர் சாரங்கபாணியை வணங்கி தரிசனம் செய்வது போல் அலங்காரம் செய்திருந்தனர்.மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.


இதே போல்  நாதன்கோயிலிலுள்ள ஜெகநாதபெருமாள் கோயிலில்  அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேஷவாகனத்தில் சொர்க்கவாசல் எனப்படும் மூலவர் வாயிலில் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மூலவர் ஜெகநாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. அதேபோல் செண்பகவல்லித் தாயார் வைகுண்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


இதேபோல் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோயில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக  நடைபெற்றது.இதே போல் தஞ்சையில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தஞ்சை  108 வைணவ தலங்களில் மூன்றாவதான மணிகுண்றப்பெருமாள், நீலமேகப்பெருமாள், சிங்கப்பெருமாள், நாலுகால் மண்டபத்திலுள்ள பிரசன்ன வெங்கடேபெருமாள், கோதண்டராமசாமி பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன்  பிரசன்னவெங்கடேசபெருமாள் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதே போல் தஞ்சை மானம்புச்சாவடி வெங்கடேசபெருமாள் கோயில்,  நீலமேகப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் அதிகாலை முதல் பெருமாளை தரிசனம் வருவார்கள்.அதனால் மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா தொற்று பரவி வருவது எதிரொலியால் குறைவான பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்தனர்.இதனால் பெரும்பாலான கோயில்களில் வெறிச்சோடி காணப்பட்டது.

வைகுண்ட ஏகாதேசி - தருமபுரி ஸ்ரீபரவாசு தேவர் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

 

Continues below advertisement
Sponsored Links by Taboola