தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் இன்று 30ம் தேதி 6 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும். "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மக்களின் குறைகளை வீட்டிற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜுலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. இரண்டாம் கட்டமாக நகர்புறங்களில் 37 முகாம்கள் கிராமப்புறங்களில் 59 முகாம்கள் ஆகிய மொத்தம் 96 முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாம்கள் நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6 இடங்களில் இன்று 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 49, 50, 51 ஆகிய பகுதிகளில் தஞ்சாவூர் புதுக்கோட்டை ரோடு, குழந்தை இயேசு மண்டபத்திலும், அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு 15.16 ஆகிய பகுதிகளில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை (ECR), பவித்ரா திருமண மண்டபத்திலும். சுவாமிமலை பேரூராட்சி வார்டு 1 முதல் 8 ஆகிய பகுதிகளில் சுவாமிமலை பாலாம்பாள் திருமண மண்டபத்திலும், பூதலூர் வட்டாரம் பாளையப்பட்டி வடக்கு, பாளையப்பட்டி தெற்கு, சானூரப்பட்டி ஆகிய பகுதிகளில் சானூரப்பட்டி ஓவியா திருமண மண்டபத்திலும், திருப்பனந்தாள் வட்டாரம் குறிச்சி, கோயில் ராமாபுரம், அத்திப்பக்கம், காவனூர் ஆகிய பகுதிகளில் பந்தநல்லூர் ஸ்ரீ அம்மன் திருமண மண்டபத்திலும், சேதுபாவாசத்திரம் வட்டாரம் மரக்காவலசை, ராவுத்தான்வயல், அடைக்கத்தேவன், சேதுபாவாசத்திரம். இரண்டாம்புலிகாடு ஆகிய பகுதிகளில் இரண்டாம்புலிகாடு சிவமணி திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது
எனவே. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.