கரூர் மாவட்டம், அரசு காலனி தங்கராஜ் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (52) இவர் தனது மனைவி ரகிமா மற்றும் மகள் ஷரிபானு (23) சுல்பிஷா ( 29 ), மகன் காசிம் (29), மருமகன் சேக் மைதீன் ஆகியோருடன் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவிற்க்கு சென்றார்.  அங்கு, நினைத்த காரியம் நிறைவேறியதால், தாங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு, பின்னர்

  குடும்பத்துடன் காரில் கரூருக்கு புறப்பட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே  முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருந்து பைக்கில் வந்த சின்ன முத்தாண்டிப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அந்தோணி சாமி என்பவர் மீது கார் மோதியது. இதில் பயணம் செய்த   அனைவரும் படுகாயம் அடைந்தனர்.



தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அந்தோணிசாமி (54), சம்சுதீன் மருமகன் சேக் மைதீன் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் பதிவு செய்து வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இது குறித்து போலீசார் கூறுகையில்,  நாகூரிலிருந்து காரில் வருபவர்கள், நெடுஞ்சாலையில் அதிகவேகமாக வருகிறார்கள். சாலையில் கால்நடைகளோ அல்லது மனிதர்களோ சென்றால், காரில் வந்தவர்களால் கட்டுப்பாடு கிடைக்காமல் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். மேலும், நெடுஞ்சாலையில் டிரைவர்கள் ஒய்வு எடுக்காமல் செல்வதால், அவர்களை அறியாமல் கண்கள் அயர்ந்து விடகிறது. அப்போது சாலையில் செல்பவர்கள் தெரிவதற்குள் விபத்து ஏற்படுகின்றது. தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தின்ந்தோறும் சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. இதே கார் மற்றும் பைக்கில் வருபவர்கள், நெடுஞ்சாலையின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு வரவேண்டும். நாகூரிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள், விரைவில் கரூருக்கு செல்ல வேண்டும் என ஒரே நோக்கத்தில் சென்றதால், சாலையின் எதிரே வருபவர் தெரிந்து, கட்டுப்பாடு இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.




தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் வருபவர்கள் அல்லது வேறு எந்த சாலைகளில் சென்றாலும், முதன்முதலில் விதிமுறைகள் தெரிந்து கொண்டும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாலையின் ஒரத்தில் ஒய்வு எடுத்து விட்டு, பயனிக்க வேண்டும்.அப்போது தான் விபத்து ஏற்படாமல், தங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்றார்.