நாகை அருகே பைக் மீது கார் மோதி விபத்து - நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சோகம்..!
இருசக்கர வாகனத்தின் மீது பின்னாள் வந்த கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரழந்தனர்.
Continues below advertisement

இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து
நாகை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்னல் வந்த கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Continues below advertisement
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் காரைக்கால்மேடு பகுதியில் ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் முஹம்மத் இக்பால் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் திருநள்ளாரில் இருந்து ஏர்வாடி செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை முகம்மது ரியாஸ் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருப்பூண்டி அடுத்த ஈசனூர் அருகே சென்றபோது இவர்களுக்கு பின்னால் வந்த கார் திடீரென முன்னால் சென்ற ரியாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் முகமது ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகமது இக்பால் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முகம்மது இக்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.