தஞ்சாவூர்: கரூர் சம்பவத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த தவெக கட்சித் தலைவர் விஜய் மீண்டும் களப்பணியில் சுறுசுறுப்பாகி உள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிதாக நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம் நிர்வாகிகளும் இடம் பிடித்துள்ளனர். 

Continues below advertisement

அந்த நிர்வாகக்குழு விபரம் வருமாறு: என்.ஆனந்த் பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர், டாக்டர். அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர், நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர், ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்,  ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்.

அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம், சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம், பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம், விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம், சிவன், மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம், பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம், சம்பத்குமார், மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம், சுகுமார், மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்,  தங்கப்பாண்டி, மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம், அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்.

Continues below advertisement

ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்,  பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம், விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம், மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம், சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம், விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம், வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்,  ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்.

பாலசுப்பிரமணியன், கழக உறுப்பினர் தூத்துக்குடி, டாக்டர். மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம். தனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாராம். இனி எப்போதும் விழிப்புடனும், கவனத்துடனும் செயலாற்ற வேண்டும். இலக்கை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும். நிர்வாகக்குழுவில் உள்ளவர்கள் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.