திருத்துறைப்பூண்டி அருகே சாளுவன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் பழுதடைந்துள்ள மதகுகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி பகுதி சேர்ந்த விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.



 

காவிரி டெல்டா கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி பகுதியில் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான  சாளுவன் ஆற்றில் குறிச்சி முளை அருகே கட்டப்பட்டுள்ள கதவணை சட்டர்ஸ்  சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனை உடனடியாக முழுமையாக சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆற்று பாசனத்தினை நம்பி மருதவனம், மீனம்பநல்லூர், மேலபுத்தூர், கீழப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை உட்கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை தெரிவித்துள்ளனர். மருதவனம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த அணையில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்  சாகுபடி நடக்கிறது. 



 

இந்த கதவனை சேதமடைந்து கதவுகள் திறந்து மூட முடியாமல் உள்ள நிலையில் கடந்தாண்டு இப்பகுதி விவசாயிகள் குறுவை சம்பா தாளடிபயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து விவசாயிகள் அனுப்பி உள்ளமனுவில் மேலபுத்தூர் கீழபுத்தூர் பணியைச் சேர்ந்த 5000 ஏக்கர் நிலம் பாசன வசதி அளிக்கக் கடிய க பாசன வாய்க்கால்களுக்கு இந்த அணையில் இருந்து தான் இந்த அணையை தேக்கி தான் தண்ணீர் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பாலம் சேதம் அடைந்து பராமரிக்காமல் விட்டதால் பாலம் மேலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்குள் இந்த அணையை முழுவதுமாக பராமரித்து அதில் உள்ள ஐந்து கதவுகளும் திறந்து மூடு வகையில் செப்பனிட்டு தர வேண்டும்.

 

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த அணையை கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருப்பதன் காரணத்தினால் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது ஆகையால் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாக பழுதடைந்துள்ள மதகுகளை கட்டித் தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.