தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என உத்தரவிட்டதை அடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் அனைத்து கட்சியினர் மற்றும் கிராம பூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாச்சியார் கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அனைத்து கட்சி பிரமுகர்கள் கிராம பூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.


கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 28 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். இருபத்தி நான்கு பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தமாக 207 பேர் படித்து முடித்தனர். இவர்களில் 2 பேர் ஏற்கனவே பணி வாய்ப்பைப் பெற்றுவிட்டனர். ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேர் வேறு அரசு வேலைகளுக்குச் சென்று விட்டனர். மீதமுள்ள 196 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருந்தனர்.


 



இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கோயில்களில் அர்ச்சகர் பணியில் சேர்வதற்கான அறிவிப்புகள் வெளியாயின. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களில் சுமார் 50 பேர் இந்த வேலைகளுக்காக விண்ணப்பித்தனர். அதில் முதல் கட்டமாக 28 பேருக்கு தற்போது பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் முதல்வர் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து நாச்சியார்கோவில் பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் திராவிடர் கழக மண்டல செயலாளர் குருசாமி, நகர தலைவர் முத்துக்குமாரசாமி ஒன்றிய செயலாளர் குணசேகரன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் சாக்கோட்டை இளங்கோவன், சோலை மாரியப்பன் வெங்கடேசன், திமுக ஊராட்சி செயலாளர் துரை பூபதி ஊராட்சி மன்ற தலைவர் உமா சங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ் முகமது விசிக சோபு. இளங்கோவன் சங்கர் கிராமப்புற பூசாரிகள் சங்க உறுப்பினர்கள் பரமசிவம், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர்  கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர், அர்ச்சர்கள், ஒதுவார்கள்கள் கலந்து கொண்டனர்.