தியாகராஜர் கோயிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திருவாரூர் தியாகராஜர் கோயில் கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோயிலின் சிறப்பாக கோயில் ஐந்து வேலி குளம் ஐந்து வேலி செங்கல் நீரோடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் கட்டப்பட்டது ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்றதாகவும் மேலும் இந்த கோவிலின் வடிவத்தைப் பார்த்து தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது என்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் கருங்கல் திருப்பணிகள்  என்ற வரலாறும் உண்டு. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேவாசிரியன் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் தேவர்கள் சிவபூஜை செய்யும் இடமாகவும் கோயிலுக்கு வருபவர்கள் தேவாசிரியன் மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோயிலுக்குள் உள்ளே செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த மண்டபத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.




இந்த மண்டபத்தில் ஒட்டு மொத்தம் 96 ஓவியங்கள் உள்ளன. குறிப்பாக தியாகராஜர் தேவலோகத்திலிருந்து தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம் யானை வாகனம் ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வானவேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட 96 வகையான ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டது. இந்நிலையில் 1988ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் செய்த பொழுது இந்த ஓவியங்கள் பழுதடைந்தன. பின்னர் தனிநபர் ஒருவர் தற்போதைய பெயிண்ட்களை பயன்படுத்தி பழுதடைந்த ஓவியங்களை சரி செய்ததற்கு பக்தர்களும் பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து சமய அறநிலைத்துறை பழைய மூலிகைகளை கொண்டு ஓவியங்களை வரைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.




இதனால் ஓவியங்கள் வரையும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போதுவரை தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பழைய மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைய வேண்டும். அதுமட்டுமின்றி தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் எடுத்து அதன் வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இது சம்பந்தமாக கேட்டதற்கு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேவா சரியின் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் மராட்டிய மன்னர் காலத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் இன்று சிதலமடைந்து வருகிறது. அதனை பழமை மாறாமல் அதே முறையில் ஓவியங்கள் வரைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த மண்டபத்தில் உள்ள 96 ஓவியங்கள் பழமை மாறாமல் அதே போன்று வரைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தியாகராஜர் கோவிலில் உள்ள கல் தேர் உள்ளிட்ட பணிகள் தற்பொழுது துரிதமாக நடைபெற்று வருகிறது. அதே போன்று ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள பழமை வாய்ந்த ஓவியங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண