திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் பிரிவில் பயின்ற 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் தற்போது மின்சாரம் வாரியம் போன்ற பல்வேறு அரசு துறைகளிலும் வெளிநாட்டிலும் வேலை பார்ப்பவர்களாகவும் தொழில் அதிபராகவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் குழு மூலம் 41 ஆண்டுகளுக்கு முன்பு படித்த இந்த மாணவர்கள் தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டு அதன் மூலம் தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.



 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவிச்சந்திரன் என்பவர் இங்கு நான்கு நண்பர்கள் 50 வயதிற்கு மேலே நாம் இருக்கிறோம் என்று பேசினார்கள். அதை கேட்கும் போது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னை பார்த்து ஓய்வு பெற்று விட்டீர்களா என்று கேட்டாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும் தெரிந்தவர்கள் என்றால் ஆம் என்பேன் இல்லை என்றால் இன்னும் வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறுவேன். இதனால் வயதை நினைவுபடுத்தாதீர்கள் என்று பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர். சிலர் தங்களுக்குள் உணவை ஊட்டி கொண்டனர். மேலும் நண்பர்களுக்கு தங்கள் கையாலேயே பரிமாறியும் மகிழ்ந்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நண்பர் ஒருவர் தனது அறுபதாம் கல்யாணத்திற்கு நண்பர் ஒருவர் வர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். உடனே அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அருகில் வந்த அந்த நண்பர் இத்தனை பேருக்கு முன்பு பொய் சொல்ல முடியாது கண்டிப்பாக நான் வருவேன் என்று கூறினார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.



 

மேலும், தொடர்ந்து வருடத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நாம் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இறுதியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண