திருவாரூரில் 3 கிலோமீட்டர் தூரம் பைக்கில் ஏறி நின்று சாகசம் செய்து அச்சுறுத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவாரூரில் 3 கிலோ மீட்டர் தூரம் வாலிபர் பைக்கில் ஏறிநின்று சாகசம் செய்து அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. மாணவர்கள் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதுவும் இரவு நேரங்களில் இவர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க காவல்துறையின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் இளைஞர்கள் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக பைக்கில் சாகசம் செய்து வருகின்றனர். 

 

பலர் கை, கால்களை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெறும் இவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இளைஞர்கள் திருந்தவில்லை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக கஞ்சா மற்றும் போதை உட்கொள்ளும் இளைஞர்களின் சேட்டை சமீபகாலமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் திருவாரூர் அருகே திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் புலிவலம் என்கிற இடத்தில் ஒரு பைக்கில் இரண்டு இளைஞர்கள் பயணம் செய்தனர். அதில் பின்பக்கம் இருக்கும் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது பைக்கில் எழுந்து நின்று சாகசம் செய்துக்கொண்டே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாங்குடி வரை சென்றார். இதனை எதிரே வந்த வாகன ஓட்டிகளும் பின்புறம் வந்தவர்களுக்கு கடும் அச்சம் அடைந்தனர்.



 

மேலும் சாகசம் செய்யும் இளைஞர் தடுமாறி விழுந்தால் என்னா ஆகும்? என்று அச்சமும் பீதியும் அடைந்தனர். சாலையில் சென்ற பொதுமக்கள் திட்டி தீர்த்து சென்றனர். ஒருகட்டத்தில் பின் தொடர்ந்து சென்றவர்கள் சிலர் வீடியோ எடுத்ததை கண்ட அந்த இரு இளைஞர்களும் வாகனத்தை வேறு திசையில் செலுத்தி அங்கிருந்து தப்பினர். இந்தநிலையில் எந்தநேரமும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும் இந்த சாலையில் அடிக்கடி தினந்தோறும் விபத்துக்கள் நடந்து வரும் சூழ்நிலையில் இந்த இளைஞர்கள் செய்த காரியம் கண்டிக்கத்தக்கது. இதனை சம்பந்தப்பட்ட காவல்துறை இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண