திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் ஆர். கே. எம். இயற்கை வேளாண் பண்ணையில் இயற்கை வேளாண்மை செய்ய வேண்டிய அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க  பயிற்சி திருச்சி மற்றும் தஞ்சாவூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இயற்கை விவசாயி செந்தில் உமையரசி அவர்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அவற்றுள் பால் குடல் வாழை அரிசி, தங்கச் சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, பூங்கார், மாப்பிள்ளை சம்பா ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்கள் குறித்தும் அவற்றை பயிரிடும் முறைகள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



 

ஆகும். மேலும்  நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்புகவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களைப் பார்வையிட்டு அதன் விவசாய நடைமுறைகளை மாணவர்கள் கேட்டறிந்தனர். தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நம் உடலின் இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. எனவே ''உணவே மருந்து, மருந்தே உணவு" என்ற பழமொழிக்கு இணங்க ,இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மேலும் இயற்கை விவசாயத்தின் பயன்கள் மண்ணின் வளத்தை மேம்படுத்துதல் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தல் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மேலும் உயிர் பல்வகைமை மேம்படுத்துதல் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை வழிவகுக்க முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. 



 


திருவாரூர் மாவட்டத்தில் திடீர் கனமழையால் 31,625 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு


செயற்கை விவசாயத்தோடு ஒப்பிடுகையில், இயற்கை விவசாயம் அதிக அளவு லாபத்தை ஈட்டுகிறது. மேலும் மாணவிகள் அங்குள்ள ஆர்.கே.எம் மீன் குஞ்சு பண்ணையில் மீன் வளர்ப்பு பற்றியும் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் செயல்பாடுகள் பற்றியும் பயிற்சி பெற்றனர். மாணவிகள் அங்குள்ள விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டியின் செயல்முறை செய்து காட்டி பயன்பாடுகளை விளக்கினர். வேம்பு, நொச்சி, புங்கன், ஆடாதொடா, நுணா, எருக்கு மற்றும் கோமியம் ஆகியவற்றைக் கொண்டு மூலிகை பூச்சி விரட்டியினை தயாரித்தும் காட்டினர். இந்த பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி மற்றும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை- தஞ்சாவூர்  மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து