கொரடாச்சேரி அருகே அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கொரடாச்சேரி அருகே வெள்ளை மதகு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அரசு பேருந்துக்கு எதிரே இரண்டு பொலிரோ வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு அதிவேகமாக வந்துள்ளது. அப்பொழுது பொலிரோ வாகனம் அரசு பேருந்து மீது மோதி உள்ளது இதில் அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த பொது மக்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரசு பேருந்தில் பயணித்த தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை சேர்ந்த சுரேஷ், திருச்சியை சேர்ந்த பிரான்சிஸ், உசிலம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள், கொரடாச்சேரி சேர்ந்த கல்லூரி மாணவி நித்தியா காயமடைந்தனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஷர்புதீன் தாய் மதினா மகள் பரிதா ஆயிஷா பானு முகமது ரிஸ்வான் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் பெருமாளகரம் பகுதியை சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 10 பேர் பலத்த காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது ஒரு சிலருக்கு தலையில் பலத்த காயமடைந்துள்ளது காயமடைந்த அனைவரையும் மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக கொரடாச்சேரி காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்