திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் சாளுவனாற்றுகரையில், எழிலூர் தொடங்கி நெடும்பலம் வரை உள்ள திடலை பயன்படுத்தி ஏறி வெட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு, இங்கு ஏரியை வெட்ட வேண்டுமென திட்டமிட்டு சுமார் 4 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி, தொடக்க நிலையிலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
எழிலூரில் வெட்டப்படும் ஏறியானது எழிலூர், மருதவனம், வங்கநகர் ஓவர்குடி ஊராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கும் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுமார் 5000 ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்டமைப்பாகவும் விளங்கும். இதன் முக்கியத்துவம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நீர் ஆதார தேவையின் முக்கியத்துவம் கருதி ஏரி வெட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட எழிலூர் முத்துப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை என்பது நிலவி வருகிறது நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவில் பாதித்துள்ளதன் காரணத்தினால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நம்பியே திருத்துறைப்பூண்டி வட்டாரம் மற்றும் முத்துப்பேட்டை வட்டார பகுதி மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மாவட்ட முழுவதும் நீர் நிலைகளில் நீரை தேக்குவதற்கான புதிய திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அந்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஏரி உருவாக்கப்பட்டால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். அதே நேரத்தில் இந்த பகுதி ஒரு சுற்றுலா துறையாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலமாக அரசுக்கு வருமானம் கிட்டும் ஆகியால் இந்த ஏரியை கிடப்பில் போடப்படாமல் உடனடியாக உருவாக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் உடனடியாக எழிலூர் ஏரி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான எந்தவித பணிகளையும் தொடங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் இதற்கான பணிகளை விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து திட்ட மதிப்பீடு செய்து பணிகளை தொடங்கினார். ஆனால் மீண்டும் 10 வருடங்களாக அந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது. இதனால் இந்த பகுதியின் குடிநீர் ஆதாரம் மட்டுமின்றி 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆகையால் குடிநீர் ஆதாரத்தையும் விவசாயிகள் நலனையும் கருத்தில் கொண்டு உடனடியாக எழில் ஏரி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.