திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிளை நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தில் பழமையான அறிய புத்தகங்கள் முதல் பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் என சுமார் 20,000 புத்தகங்கள் இங்கு உள்ளன. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த 2135 வாசகர்கள் உறுப்பினராக உள்ளனர். 66 பேர் புரவலராக உள்ளனர் தினந்தோறும் 40 முதல் 50 பேர் குறையாமல் வந்து செல்கிறனர். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் அதிகளவில் இங்கு வந்து செல்வதுதுண்டு. நூலகம் துவங்கும் போது சாதாரண ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நூலகம் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கடந்த 2007-2008ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வந்த நிலையில் போதிய தரத்துடன் கட்டப்படாததால் பழுதடைந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு 2014-2015ம் ஆண்டு ஆர்.பி.எம்.ஆர் திட்டத்தின்படி ரூபாய் 66500 செலவில் கட்டிடம் பழுதுநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பணியும் முறையாக நடைபெறாததால் அடுத்த சில மாதங்களில் மீண்டு கட்டிடத்தின் சிலாப் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் சிலாப் வழியிலும் சேதமான சுவர்கள் வழியிலும் கசிந்து நூலகத்திற்குள் சொட்டுகிறது. இதனால் புத்தங்கள் வீணாகி வருகிறது.
இதன் மூலம் அறிய புத்தங்களை, பயனுள்ள புத்தகங்கள் வீணாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் புத்தங்கங்கள் வாசகர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நேரத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டதால் அப்போதைக்கு இடம் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது அதிகளவில் புத்தகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தால் அதேபோல் வாசகர்கள் வரத்தும் அதிகளவில் வந்து செல்வதால் தற்போது இந்த நூலக கட்டிடம் போதுமானதாக இல்லை. இதனால் வாசகர்கள் உக்கார்ந்து படிக்கவும் மிகவும் சிரமம்மாக உள்ளது. இதனால் இங்கு வரும் வாசகர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிகையும் படிபடியாக குறைய வாய்ப்புகள் உள்ளது. இந்தநிலையில் இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு இந்த நூலக கட்டிடத்தில் மழைநீர் கசிந்து உள்ள சொட்டியது இதனை பார்த்த நூலக அலுவலர் புத்தங்களை நனையாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் சாக்கு பைகள் போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் இங்குள்ள அனைத்து புத்தகங்களும் மழைநீரில் நனைந்து வீணாகி விடும். அதனால் இந்த கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அப்போதைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் கண்டுக்கொள்ளவில்லை. எனவே இந்த 20ஆயிரம் புத்தகங்களையும் பாதுக்காக்கும் வகையிலும் வாசகர்கள் வந்து உக்கார்ந்து பொறுமையாக படிக்கும் வசதியை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் அதிகளவில் வாசகர்கள் அமரும் வகையில் கூடுதல் புத்தகங்களை வைக்கும் வகையில் போதுமான அளவு கட்டிடத்தை உடன் கட்டித்தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நூலக வாசகர்கள் கூறுகையில்: உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் இந்த கிளை நூலகத்தில் சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கின்றன. இங்கு அதிகளவில் வாசகர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் வந்து பயன் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த சூழ்நிலையில் நூலக கட்டடம் சுமார் 20வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்போது மிகவும் மோசமான முறையில் பழுதடைந்த உள்ளது. இந்த சூழ்நிலையில் மழைக்காலத்தில் கட்டத்தில் மழைநீர் கசிவினால் புத்தகங்கள் நனைந்து விடுகிறது. அதுமட்டும் இல்லாமல் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதுமான வசதிகள் இல்லை கேட்பாரற்று கிடக்கிறது நாங்கள் தேடும் புத்தங்களை ஈசியாக எடுக்க முடியவில்லை. இதனால் இங்கு வர ஆர்வம் குறைந்து விடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அதிகளவில் வாசகர்கள் அமரும் வகையிலும் அதிகளவில் புத்தங்களை வைக்கும் வகையிலும் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.