திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த அறிவிப்பிற்கு அரசு ஊழியர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 15 மாதங்கள் ஆகியும் இதுவரை பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என நிதியமைச்சர் தெரிவித்ததற்கு அரசு ஊழியர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் கடந்த நான்கு மாத காலத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மறுக்கப்படும் அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும், மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக முழுமையாக அமல்படுத்திட வேண்டும். அரசு துறையில் ஒப்பந்தம் தின கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து கால வரை ஊதியத்தில் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்
கருவூலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை பயன்படுத்தும் மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதே கைவிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் சௌந்தரராஜன் மாவட்ட இனை செயலாளர் சுதாகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். உடனடியாக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தமிழக முழுவதும் அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.